Rishabh Pant
மூன்றாவது போட்டியில் ரிஷப் பந்த் பங்கேற்பாரா..? பிசிசிஐ விளக்கம்..!! இந்தியா – ஏ அணியில் காயம் காரணமாக விலகிய ரிஷப் பந்துக்கு பதிலாக குமார் குஷாக்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா ‘ஏ’ அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவாரா என்பது அவரது உடல் தகுதியைப் பொறுத்தே அமயும் என கூறப்பட்டது. இந்த நிலையில், முதல் இரண்டு போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார்.
மேலும் படிக்க: அபிஷேக் சர்மா T20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்து சாதனை

இரானி கோப்பைப் போட்டியில் ‘ரெஸ்ட் ஆஃப் இந்தியா’ அணியை வழிநடத்தியபோது, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பந்துக்கு இடது பக்கவாட்டுத் தசையில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவர் நன்றாக குணமடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், மூன்றாவது போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.