Actor Vijay Sethupathi
மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி காம்போ..!! டிரெயின் பட தேதி வெளியீடு. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டிரெயின்.
த்ரில்லர் பாணியில் முழுவதும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க: ரஜினிகாந்த்தின் “ஜெயிலர் 2” படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் வாழ்த்து..!!
மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், படம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.