Why was Bhuvneshwar Kumar selected in the Indian team? Team’s batting coach Sitanshu Kotak explains
36 வயதான Bhuvneshwar Kumar புவனேஷ்வர் குமார், இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். எதிர்வரும் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 கிரிக்கெட் அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். கடைசியாக கடந்த 2022 நவம்பரில் இந்திய அணிக்காக அவர் விளையாடி இருந்தார். இந்நிலையில், இந்திய அணிக்கு அவர் மீண்டும் திரும்பியுள்ளது கவனம் பெற்றுள்ளது. அது ஏன் என்பது குறித்து சிதான்ஷு கோட்டக் பேசியுள்ளார்.
சிதான்ஷு கோட்டக் பேசியதாவது:-

“இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பும்ரா இல்லாத சூழலில் இளம் வீரர்கள் அதிகம் விளையாடினர். இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்ற காரணத்தால் தான் அணியில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இருப்பினும் சில நேரங்களில் அனுபவம் என்பது மிகவும் முக்கியம் என்று நான் கருதினேன். அதனால் அவரது தேர்வுக்கு அதுவொரு காரணமாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
அனுபவத்திற்கு முக்கியத்துவம்:
அணியில் பல இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், நெருக்கடியான கட்டங்களில் அனுபவத்தை அடித்துக்கொள்ள முடியாது என்பதால் புவனேஷ்வர் குமாரின் அனுபவம் தேவைப்பட்டது.
இளம் பந்துவீச்சாளர்கள்
வீரர்களை எப்படி தேர்வு செய்கிறார்கள் என்பது அணித் தேர்வுக்குழுவைப் பொறுத்தது. ஆனால், நான் எனக்குத் தோன்றுவதை கூற நினைக்கிறேன். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அணியில் நிறைய இளம் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். ஆனால், ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை.
அந்தத் தொடரில் பும்ரா இல்லாததது எந்த அளவுக்கு நெருக்கடியாக இருந்தது என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். எப்போதும் வீரர்களின் அனுபவத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது.
மேலும் படிக்க: மூன்றாவது போட்டியில் ரிஷப் பந்த் பங்கேற்பாரா..? பிசிசிஐ விளக்கம்..!!
2025 மற்றும் 2026 ஐபிஎல் தொடர்களில் மட்டும் அவர் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் (இதில் 2026-ல் மட்டும் 28 விக்கெட்டுகள்).

ஐபிஎல் அசத்தல் ஆட்டம்: கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக புவனேஷ்வர் குமார் மிகச் சிறப்பாகப் பந்துவீசி அசத்தினார்.
நியூஸிலாந்து ஆடுகள சூழலில் அவரது அனுபவம் அவசியம்
நியூசிலாந்து ஆடுகளங்களின் தன்மையும், பந்து ஸ்விங் ஆகும் சூழலும் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சுக்கு கூடுதல் பலன் தரும் என தேர்வுக்குழு கருதியுள்ளது.
இதோடு கடந்த இரண்டு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் Bhuvneshwar Kumar புவனேஷ்வர் குமார் மிக சிறப்பாக செயல்பட்டிருந்தார். நியூஸிலாந்து ஆடுகள சூழலில் அவரது அனுபவம் அவசியம் என்று அணியின் தேர்வுக்குழுவினர் கருதியிருக்கலாம். அவரும் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் செயல்பட்டார். இப்போது அணியில் இடம்பெற்றுள்ளார்” என்று சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.
இளம் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். அவர்கள் நன்றாக செயல்படுவதன் மூலம் அணியில் தேர்வாகிறார்கள். ஆனால், சில தருணங்களில் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது முக்கியம். அதன் காரணமாகவே, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் Bhuvneshwar Kumar புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளார். அவர் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக மிகவும் அபாரமாக செயல்பட்டுள்ளார். நியூசிலாந்து ஆடுகளங்களில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பது முக்கியம் என்றார்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு ரீஎன்ட்ரி:
4 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-க்குப் பிறகு மீண்டும் 36 வயதான புவனேஷ்வர் குமார் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.