Xiaomi 18 Pro smartphone
Xiaomi 18 Pro smartphone:
ஸ்மார்ட்போன் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த Xiaomi 18 Pro மற்றும் Xiaomi 18 Pro Max ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய அறிமுகத் தேதியை Xiaomi நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, வரும் நவம்பர் 17, 2026 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் புதிய ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை YouTube மற்றும் X தளங்களில் நேரலையாகப் பார்க்கலாம்.
Xiaomi 18 Pro – எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
Xiaomi 18 Pro ஸ்மார்ட்போனில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.
- டிஸ்ப்ளே: 6.4 இன்ச் AMOLED திரை.
- ப்ராசஸர்: Snapdragon 8 Elite Gen 6.
- பின்புற கேமரா: 200MP முதன்மை கேமரா.
- டெலிஃபோட்டோ கேமரா: 200MP பெரிஸ்கோப் கேமரா.
- அல்ட்ரா வைடு: 50MP கேமரா.
- பேட்டரி: சீனப் பதிப்பில் 7,000mAh.
- சார்ஜிங்: 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்.
Xiaomi 18 Pro Max சிறப்பம்சங்கள்

Xiaomi 18 Pro Max மாடலில் 6.9 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, Snapdragon 8 Elite Extreme Gen 6 பிராசஸர் மற்றும் 2.9 இன்ச் பின்புற டிஸ்ப்ளே இடம்பெறுகின்றன.
சீனப் பதிப்பில் 8,500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.
அறிமுகமாகும் நிறங்கள்
சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன்கள் பின்வரும் நிறங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
- Velvet Red
- Cosmic Blue
- White
சில சந்தைகளில் Black நிறமும் கிடைக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?
இந்தியாவிலும் Xiaomi 18 Pro ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என Xiaomi India ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி மற்றும் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
டிசம்பர் 2026-ல் இந்திய அறிமுகம் இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
விலை எவ்வளவு?
ஐரோப்பிய சந்தைக்கான விலை குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவை சில்லறை விற்பனையாளர் பட்டியல்கள் மற்றும் கசிந்த தகவல்களின் அடிப்படையிலானவை. எனவே அதிகாரப்பூர்வ விலை அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.
Xiaomi 18 Pro சீரிஸ்
அதிநவீன Snapdragon பிராசஸர், 200MP கேமரா, பெரிய பேட்டரி மற்றும் பின்புற இரண்டாம் நிலை டிஸ்ப்ளே எனப் பல சிறப்பம்சங்களுடன் Xiaomi 18 Pro சீரிஸ் அறிமுகமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஐரோப்பியாவில் இந்திய மதிப்பில் ரூ.1,50,000-க்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் டிசம்பரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு tnnewsnow.com யை பாருங்கள். உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க…