கனமழை எச்சரிக்கை
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உள்ளதால், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) முக்கிய வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 13-ம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உருவான அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை?
இன்று புதன்கிழமை தென் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அவை:
1. சிவகங்கை
2. ராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. திருநெல்வேலி
இந்த 4 மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை நிலவரம்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட 4 மாவட்டங்கள் தவிர, மற்ற பல மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
அதேபோல் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
விவசாயிகளை பொறுத்தவரை இந்த மழை அவர்களுக்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கும். நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களை போல சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், வங்கக்கடலில் உருவாகும் புதிய சிஸ்டம் காரணமாக அடுத்த 2 நாட்களில் சென்னையிலும் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை மக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து வர வேண்டும்.
இது புயலாக மாறுமா?

தற்போது வரை இது புயலாக மாறும் என எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது வெறும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக தான் உருவாகிறது.
இது எந்த திசையில் செல்லும், எங்கு கரையை கடக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. வானிலை மையம் இதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் இதன் நகர்வு குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் இது போன்று அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாவது இயல்பான ஒன்று தான். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு இது போன்ற சிஸ்டங்களை சந்திப்பது வழக்கம்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்
மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு முன் கண்டிப்பாக வானிலை அறிவிப்பை பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நாட்களில் கடல் கொந்தளிப்பாக இருக்கும்.
கரையில் இருந்து தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மீன்வளத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நவம்பர் 13-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
படிப்படியாக வலுப்பெற வாய்ப்பு
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து:
- நவம்பர் 13: காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு.
- நவம்பர் 14: வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பு.
- நவம்பர் 15: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு.
என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் மழை பெய்யுமா?
நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மின்சார வாரியம், குடிநீர் வாரியம், மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் அவசர நிலைக்கு தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் செய்ய வேண்டியவை
1. தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும்
2. மின் கம்பங்கள், மரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம்
3. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருக்கவும்
4. குழந்தைகளை மழைநீரில் விளையாட விட வேண்டாம்
5. செல்போனை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும்
வானிலை நிலவரம் குறித்த செய்திகளை உங்கள் TN NEWS NOW-ல் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.