Nellai online fraud Full Details

nellai online fraud :
நெல்லையைச் சேர்ந்த அரசு ஊழியரிடம் டிஜிட்டல் கைது செய்திருப்பதாகக் கூறி ரூ.28.50 லட்சம் மோசடி செய்த கேரளத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்த அரசு ஊழியரிடம் ரூ.28.50 லட்சம் மோசடி..!!
நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு குறற்வாளிகளை கைது செய்திருக்கிறார்கள்.
நெல்லை டவுன் தச்சநல்லூரை அடுத்த சேந்திமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அனந்தப்பன் (வயது 61). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார்.
இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 6-ந்தேதி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எதிர்திசையில் பேசிய நபர், மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. காவல் துறையின் மூத்த ஆய்வாளர் சந்தீப்ராஜ் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அந்த நபர், அனந்தப்பனின் எண்ணை பயன்படுத்தி 6 மாநிலங்களில் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, நக்சல் தீவிரவாதிகளுக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக கூறி பீதியை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து அடுத்தநாள் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட மற்றொரு நபர், காவல்துறை சீருடையில் தோன்றி அனந்தப்பனை “டிஜிட்டல் அரெஸ்ட்” செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். மேலும், ஏ.டி.ஜி.பி. விஸ்வாஸ் என்பவர் உங்களை தொடர்புகொள்வார் எனக் கூறி, அவரது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் சேமிப்பு தொகை விவரங்களை பெற்றுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் மிரட்டி, ஒரு குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை அனுப்ப வைத்துள்ளனர். மறுநாள் தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு அருகில் சென்று அவர்களை வாட்ஸ் அப் வீடியோ காலில் அனந்தப்பன் தொடர்பு கொள்ள முயன்றபோது அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அனந்தப்பன், தனது மகன் மற்றும் மருமகனிடம் விபரங்களை தெரிவித்தனர். அவர்கள் விசாரித்த பின்னரே தாங்கள் ஆன்லைன் மோசடியில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் நெல்லை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் இழந்த பணத்தை மீட்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில், துணை போலீஸ் கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது.
அதில் டிஜிட்டல் கைது செய்ததாக கூறி ரூ.28.50 லட்சம் மோசடி செய்தது கேரளா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தனிப்படையினர் விரைந்தனர். தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் நெடுவெளிகாட்டை சேர்ந்த ரவிக்குமார்(52), விஸ்வபுரத்தை சேர்ந்த தினேஷ்(52), கண்ணூர் மாவட்டம் எடக்காடு பகுதியை சேர்ந்த அப்துல் சமது(50) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த மோசடி குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டிஜிட்டல் கைது என்ற பெயரில் வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் ஒருபோதும் வீடியோ காலில் வந்து பணம் கேட்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் இருந்து 5 செல்போன்கள், 8 வங்கி கணக்கு புத்தகங்கள், ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்தை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சந்தேகமான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். தெரியாத நபர்கள் அனுப்பும் APK பைல்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். இந்த Nellai online fraud போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும் 15க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Nellai online fraud போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: [Tamil Nadu Crime News]
மேலும் விவரங்களுக்கு: https://cybercrime.gov.in