Coimbatore Periyar Science World..!! Tamil Nadu Chief Minister Vijay will inaugurate it today.
கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை, தமிழக முதல்வர் விஜய் மக்கள் பயன்பாட்டுக்கு இன்று திறந்து வைக்கிறார்.
கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள (Coimbatore Periyar Science World ) பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை கடந்த DMK ஆட்சியில் 2024 நவம்பர் 6-ல் அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 இலட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி கட்டி முடிக்கபட்டது .
கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியாா் அறிவுலகம் (Coimbatore Periyar Science World) மற்றும் அறிவியல் மையத்தை, தமிழக முதல்வர் விஜய் மக்கள் பயன்பாட்டுக்கு இன்று திறந்து வைக்கிறார். முதல்வா் வருகையை முன்னிட்டு, அவிநாசி சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் சுமாா் 7 ஏக்கா் பரப்பில் பொதுப் பணித் துறை சாா்பில் (Coimbatore Periyar Science World ) பெரியாா் அறிவுலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 2024 நவம்பா் மாதம் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இந்த நூலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் 11 மணியளவில் வந்தடையும் முதல்வா் ச.ஜோசப் விஜய், அங்கிருந்து 11.45 மணியளவில் காந்திபுரம் (Coimbatore Periyar Science) பெரியாா் அறிவுலகத்துக்கு சாலை வழியாக வருகை தந்து கல்வெட்டை திறந்துவைக்கிறாா். தொடா்ந்து, பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 8 தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகம், ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ நூலகம், 350 போ் அமரக்கூடிய அதிநவீன அரங்கம் மற்றும் அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
(Coimbatore Periyar Science World ) பெரியாா் அறிவுலகம் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னா், பிற்பகல் 1.40 மணியளவில் கோவை ஆயுதப் படை மைதானத்துக்குச் செல்லும் முதல்வா் விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலமாக கேரள மாநிலம், திருச்சூருக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அங்கு தனியாா் நகைக் கடையில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளாா் என்று கூறப்படுகிறது.
முதல்வரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம், பீளமேடு, ரெட்பீல்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

(Coimbatore Periyar Science World ) ஒவ்வொரு தளத்தின் கட்டமைப்பு | The structure of each site (Floor Plan)
தரைத்தளம் (Ground Floor): கோளரங்கம் (Planetarium), 6,000 சதுர அடியில் அறிவியல் கண்காட்சி, ஸ்பேஸ் லிப்ட், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகப் பிரிவு மற்றும் ஆடிட்டோரியம்.
தரைத்தளம் (Ground Floor): கோளரங்கம் (Planetarium), 6,000 சதுர அடியில் அறிவியல் கண்காட்சி, ஸ்பேஸ் லிப்ட், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகப் பிரிவு மற்றும் ஆடிட்டோரியம்.
தரைத்தளம் (Ground Floor): கோளரங்கம் (Planetarium), 6,000 சதுர அடியில் அறிவியல் கண்காட்சி, ஸ்பேஸ் லிப்ட், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகப் பிரிவு மற்றும் ஆடிட்டோரியம்.
முதல் தளம் (1st Floor): கீழடி அருங்காட்சியகம் மற்றும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) வழி கற்றல் மாதிரிகள்.
இரண்டாம் தளம் (2nd Floor): குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகங்களை வைத்துப் படிக்கும் சுய வாசிப்புப் பிரிவு.
மூன்றாம் தளம் (3rd Floor): போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் (Competitive Exams Section) மற்றும் நிர்வாக அலுவலகம்.
நான்காம் தளம் (4th Floor): தமிழ் நூல்கள் பிரிவு மற்றும் முக்கிய பருவ இதழ்கள்.
ஐந்து மற்றும் ஆறாம் தளங்கள் (5th & 6th Floors): ஆங்கில நூல்கள் பிரிவு மற்றும் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான ‘இன்குபேஷன் சென்டர்கள்’ (Incubation Centres).
ஏழாம் தளம் (7th Floor): எதிர்கால அறிவியல் தொழில்நுட்ப மையம் (AI & Robotics) மற்றும் டிஜிட்டல் நூலகம்.
அத்துடன், விண்வெளி குறித்த நேரடி அனுபவத்தை பெறும் வகையில் கோளரங்கம் மற்றும் ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் நூலகம் மற்றும் அறிவியல் சாா்ந்த வசதிகள் தகுந்த முறையில் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட நூலகம், எண்ம (டிஜிட்டல்) நூலகம், தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாற்று நூல்கள் பிரிவுகள், ஆராய்ச்சி படிப்பகங்கள், குழந்தைகள் நூலகம் மற்றும் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கான ‘இன்குபேஷன்’ மையம் ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.