Arlekar as the new Governor
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வந்த ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கேரளா ஆளுநராக இருந்தபடி தமிழகத்திற்கு கூடுதல் பொறுப்பு வகித்து வந்த அவர், இனி தமிழகத்தின் 21வது ஆளுநராக தொடர்வார். கேரளாவுக்கு ஓம் பிரகாஷ் மாத்தூர் மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: தமிழ்நாடு அரசியல் செய்திகள்
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவி சுமார் நான்கரை ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் தனது பணியை முடித்துக் கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, தனது கோப்புகளை ஒப்படைத்து விட்டு சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னை பழைய விமான நிலையம் பகுதியில், தமிழ்நாடு காவல் துறை சார்பாக மரியாதை அளிக்கப்பட்டு, தமிழ்நாடு காவல் துறை மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் மரியாதை உடன் வழி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு புதிய கூடுதல் பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (மக்கள் பவன்) இன்று பதவி ஏற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வந்த ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் (Arlekar as the new Governor) தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.