MK Stalin is the first culprit in the SIR issu – Minister Adhav Arjuna
உரிய நேரத்தில், எஸ்ஐஆர் பணிகளில் திமுக செய்த சதி வேலைகளை முழுமையாக ஆதரங்களுடன் அம்பலப்படுத்துவோம். தமிழக வெற்றிக் கழகம் என்றும் ஜனநாயகத்துக்கு எதிராக, விதிமுறைகளுக்கு மாறாக நடைபெறும் எஸ்ஐஆர் நடைமுறையை எதிர்க்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், (MK Stalin is the first culprit in the SIR) எஸ்ஐஆர் விவகாரத்தில் ஜனநாயகப் படுகொலை செய்த முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின்தான். மாநில உரிமைகள் என்றால், டெல்லியில் பதுங்குவது, தமிழகத்தில் பாய்வது. எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு; ஆளும் கட்சியாக இருக்கும்போது மற்றொரு பேச்சு. 70 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருக்கும் திமுகவின் அரசியல் “டிராமா’க்கள்” காலம் காலமாக தமிழகத்தில் இப்படித்தான் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
SIR எஸ்.ஐ.ஆர். முறைகேடுகளை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கள்ள மவுனம் காத்துக் கொண்டிருக்கும் திமுக, ‘எஸ்ஐஆர் டிராமா’-வை புதிதாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. எஸ்ஐஆர் பணிகள் தமிழகத்தில் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த நாளில் இருந்து, திமுகவின் செயல்பாடுகளை கவனித்தவர்களால் திமுகவின் திருட்டு ‘டிராமா’-வை எளிதாகவே புரிந்து கொள்ள முடியும்.
எஸ்ஐஆர் நடைமுறையை ஆரம்பத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பதுபோல் காட்டிய திமுக, மெல்ல மெல்ல தேர்தல் ஆணையத்தோடும் ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியோடும் ரகசிய திமுக கூட்டணியை அமைத்துக் கொண்டது. அந்தக் கூட்டணி முழுமை பெற்றதையடுத்து, தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முழுவதும் திமுகவின் கட்டுப்பாட்டிலேயே நடைபெற்றது.

எஸ்ஐஆர் என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால், ஒன்றிய பாஜக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் ஒவ்வொரு வீதியிலும். ஒவ்வொரு தெருவிலும். ஒவ்வொரு சந்துகளிலும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்தியது திமுகதான். இதை யாராலும் மறுக்க முடியுமா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா? 2025 அக்டோபர் 27-ஆம் தேதி முதல் 2026 பிப்ரவரி 23-ஆம் தேதி வரை எஸ்ஐஆர் பணி நடந்த காலம் முழுவதும், தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். ஒவ்வொரு வாக்குச்சாவடியின் ‘ஓட்டு ஜாபிதா’வும் திமுகவின் கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்களிடம்தான் இருந்தன.

களத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள்(BLO) அனைவரும் மாநில அரசின் ஊழியர்களாக இருந்தாலும், வாக்காளர் பட்டியல் போய்ச் சேர்ந்தது திமுக ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்களின் கைகளுக்குத்தான். எந்த அதிகாரி. எந்த வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதைத்கூட திமுக மாவட்டச் செயலாளர்களும், அந்தந்த மாவட்டங்களில் அன்றைக்கு அமைச்சர்களாக இருந்தவர்களுமே முடிவு செய்தனர்.
அதோடு, 70 ஆண்டுகள் தேர்தல் அனுபவமும் கள்ள ஓட்டுக்கள் போடுவதில் கின்னஸ் சாதனையை மிஞ்சிய சாதனையைப் படைத்துள்ள திமுக, இதற்காக 7 லட்சம் பேரை களத்தில் இறக்கியது. அவர்கள் அத்தனை பேரும் திமுக நிர்வாகிகள், திமுக ஆதரவாளர்கள். இவர்களில், 75 ஆயிரத்து 32 BLA2-க்கள், 5 லட்சத்து 50,000 வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் (BLC), 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) என்று வேலைகளைப் பிரித்துக் கொடுத்து, ஒரு ஜனநாயகப் படுகொலைக்கு கூலியாட்களாக அவர்களை நியமித்து, தங்கள் ஊழல் பணத்தில் கோடிக்கணக்கில் செலவும் செய்தது.
அந்தக் கூலியாட்கள்தான் முழுமையாக எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டனர். “உங்கள் வாக்குகள் பறிபோகாது. திமுக முகவர்கள் உங்கள் வீடுகளுக்கே வந்து உங்கள் விபரங்களைப் பெற்றுக் கொள்வார்கள்” என்று திமுக தலைவரும், அன்றைக்கு முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் இதைப் பெருமையாகப் பேசினார்.
அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி , “எஸ்ஐஆர் வேலைகளை தேர்தல் ஆணையத்துக்காக திமுக தான் செய்கிறது. திமுக கட்டுப்பாட்டில்தான் எஸ்ஐஆர் வேலைகள் நடக்கின்றன” என்று குற்றம்சாட்டினார். ஆனால், எஸ்ஐஆர் என்ற அறிவிப்பு தமிழகத்துக்கு கூட அல்ல… பிஹார் மாநிலத்தில் நடந்தபோதே, தமிழக வெற்றி கழகம் அதைக் கடுமையாக எதிர்த்தது.
தொடர்ந்து எஸ்ஐஆர் நடைமுறைகள் வந்தபோதும், அதில் குளறுபடிகள் வந்தபோதும், முதற்கட்டமாக 97 லட்சத்துக்கும் அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்டபோதும்… தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக எதிர்த்தது. அறிக்கைகள் விட்டு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்ல… உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி எஸ்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு நடத்தியது தமிழக வெற்றிக் கழகம்.
ஆனால், எஸ்ஐஆர் வந்தபோதும், அதன் நடைமுறைகள் தொடங்கியபோதும் எதிர்த்த திமுக, எஸ்ஐஆர்ல் முதற்கட்டமாக 97 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள்… ஏறத்தாழ ஒரு கோடி பேர் நீக்கப்பட்ட நேரத்தில் ஒரு அறிக்கைகூட வெளியிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதன்பிறகு, இரண்டாவது கட்ட நடைமுறையில், சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் மட்டும் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
இறுதியாக, 74 லட்சம் வாக்காளர்கள் தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். 6.4 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.7 கோடியாகச் சுருங்கியது. இதில், தமிழக மக்களின் புதிய நம்பிக்கையாக தோன்றியிருந்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்று கருதப்பட்ட, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் – பெண்கள் குறிவைத்து நீக்கப்பட்டிருந்தனர்.
மாற்றத்தை விரும்பிய தமிழகத்தின் புதிய தலைமுறையினரின் உரிமை பறிக்கப்பட்டிருந்தது. ஜனநாயகத்தின் வலிமையை அழித்தொழிக்கும் இந்த வேலையை திமுகவே தலைமையேற்று நடத்தியது. அந்த மமதையில்தான், 21.2.2026 அன்று மதுரையில் நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் (S.I.R.) மூலம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
ஆனால், தமிழகத்தில் யாருடைய வாக்குகளையும் நீக்க விடாமல், பம்பரமாக உழைத்த இயக்கம் திமுக. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யப் போவது எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்ட திமுக-வின் BLA, BLC, BDA என பணியாற்றிய 7 லட்சம் பேர்தான்” என்று பேசினார். அதோடு நிற்கவில்லை, தேர்தல் ஆணையம் மற்றும் அரசு இயந்திரத்தில் இருந்து வாக்காளர் குறித்த தரவுகளைத் திருடிக் கொண்ட, திமுகவின் ‘பென்’ நிறுவனம், தேர்தல் நாளான்று வாக்களித்தவர்களை ‘டிராக்’ செய்யும் புதிய செயலி (App) ஒன்றையும் உருவாக்கியது.
“தங்கள் ஆதரவு வாக்குகளை எல்லாம் காப்பாற்றிக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவான வாக்குகளை எல்லாம் எஸ்ஐஆர் மூலம் நீக்கிவிட்டோம்; இனி நம் வெற்றியை யாரும் தடுக்க முடியாது” என்ற அகங்காரத்தில் இருந்தது திமுக. அது உண்மையும்கூட. அப்படி நடந்ததால்தான் தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து ஒரு மகத்தான வாக்குப் புரட்சிக்கு தயாராக இருந்தபோதும், 108 தொகுதிகளில் மட்டுமே தவெக வெற்றி பெற்றது.
எஸ்ஐஆர் இல்லாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 160 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும். திமுக சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தைக் கூட பெற்றிருக்காது.
இப்படி, இந்தியாவின் தனித்துவமான ஜனநாயகத்தைப் படுகொலை செய்த பழியில் பங்கேற்றுவிட்டு, இன்றைக்கு முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவர் நடத்திக் கொண்டிருக்கும் ‘டிராமா’-வையும் திமுகவையும் இனி தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; ஜனநாயக சக்திகளும் ஆதரிக்காது. இனிவரும் எந்தத் தேர்தலிலும் திமுக வெல்லாது. ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் பழியில் பங்கெடுத்த திமுகவை மொத்தமாக தமிழக மக்கள் ஜனநாயகத் தேர்தல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். இனியும் அப்புறப்படுத்துவார்கள்.
MK Stalin is the first culprit in the SIR
அதற்கு உதாரணம்தான், 6 மாதங்களுக்கு முன்பு 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அகங்காரத்துடன் பேசிக் கொண்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்மையில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றதையே பெருமையாகப் பேசி விளம்பரம் செய்யும் அவல நிலைக்கு தமிழக மக்கள் தள்ளினர். (MK Stalin is the first culprit in the SIR) MK Stalin is the first culprit in the SIR, எஸ்ஐஆர் விவகாரத்தில் ஜனநாயகப் படுகொலை செய்த முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின்தான். மாநில உரிமைகள் என்றால், டெல்லியில் பதுங்குவது, தமிழகத்தில் பாய்வது. எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு; ஆளும் கட்சியாக இருக்கும்போது மற்றொரு பேச்சு. இது ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்திய திமுகவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்பு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.