Heavy rain warning
தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை – 3 மாவட்டங்களுக்கு அலர்ட்..!! குமரிக்கடல் முதல் வட உள் கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாடு வானிலை நிலவரம்

இன்று கோவை மலைப்பகுதி, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..!!