வாக்காளர் பட்டியல்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) முடிந்த பிறகு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் 4 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 77 லட்சத்து 46 ஆயிரத்து 618 ஆக உள்ளது. இதில் 2.95 கோடி பெண் வாக்காளர்களும், 2.82 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,892 பேர் உள்ளனர்.
உங்கள் பெயர் இருக்கிறதா? இப்படி சரிபாருங்கள்
SIR-ன் போது பலரது பெயர்கள் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்பதை http://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் சென்று சரிபார்க்கலாம்.
பெயர் இல்லை என்றால், டிசம்பர் 11-ம் தேதிக்குள் Form 6 மூலம் புதிதாக விண்ணப்பிக்கலாம். பெயர், முகவரியில் தவறு இருந்தால் Form 8 மூலம் திருத்தம் செய்யலாம்.
ஏன் இது முக்கியம்?
வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் இது தான் இறுதி வாக்காளர் பட்டியலாக இருக்கும் என்பதால், அனைவரும் தங்கள் பெயரை சரிபார்ப்பது அவசியம் என தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.