Prisoner Raghavan escapes from Coimbatore Central Jail!
கோவை : கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து ராகவன் (25) என்ற கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த ராகவன், வழிப்பறி வழக்கு தொடர்பாக அன்னூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து வரப்பட்டார்.
சிறை நுழைவு வாயிலில் நடந்தது என்ன?

சிறையின் முதல் நுழைவு வாயிலில் இருந்து இரண்டாவது நுழைவு வாயிலுக்கு கைதி ராகவனை அழைத்துச் சென்றபோது, அவரது கையில் இருந்த விலங்கை போலீசார் அகற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது போலீசாரின் கண்காணிப்பில் இருந்து திடீரென ராகவன் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
கைதி தப்பியோடியதைத் தொடர்ந்து கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைதி ராகவன் ஏற்கெனவே பெங்களூருவில் திருட்டு வழக்கில் தண்டனை பெற்றவர் என்றும், இதற்கு முன்பும் போலீஸ் காவலில் இருந்து தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.