PMO and CMO-TN travelling in Chennai Metro train..!!
சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாம் கட்ட திட்ட பணிகளின் ஒரு பகுதியாக நிறைவடைந்துள்ள பூந்தமல்லி,வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் தொலைவிலான சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
“அம்ரித் பாரத்” திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் மேம்படுத்தப்பட்ட பழனி பரமக்குடி,நாமக்கல்,அம்பாசமுத்திரம், வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் மற்றும் கோவை பகுதியில் 3 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் காரைக்கால் பேரளம் இடையே 23 கிலோமீட்டர் புதிய ரயில் பாதை என ரூபாய் 700 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
பிரதமருடன் இணைந்து பயணிக்கும் தமிழக முதல்வர் | PMO and CMO-TN

மேலும் படிக்க: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் எதிரொலி… களம் இறங்கிய 23,000 வீரர்கள்..!!
பின்னர் முதல்வர் விஜயுடன் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் இணைந்து பயணம் செய்கிறார் மேலும் ஐஐடியில் இயங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
இந்தத் தொடக்க விழாவின் போது, பிரதமரும் முதல்வரும் மெட்ரோ ரயிலில் அருகருகே அமர்ந்து ஒன்றாகப் பயணித்தனர். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பிரதமருடன் இணைந்து பங்கேற்ற முதல் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சி மற்றும் பயணம் இதுவாகும்.
அண்மையில், அக்டோபர் 11, 2026 அன்று, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் பூந்தமல்லி – வடபழனி இடையேயான வழித்தடச் சேவையைப் (PMO and CMO-TN) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோர் இணைந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
சிவப்பு மண்டலமாக அறிவிப்பு:
விமான நிலையத்திலிருந்து பரங்கிமலை ராணுவ மைதானம் வரை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் இருந்து, அண்ணா பல்கலை வரை ரோடு ஷோ செல்கிறார். பிரதமரின் சென்னை வருகை ஒட்டி 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக 11ஆம் தேதி மீனம்பாக்கம், கிண்டி கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகள் மற்றும் பிரதமர் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் அனைத்து பகுதிகளும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் லாட்ஜுகள் தங்கும் விடுதிகள் ஹோட்டல்கள் தங்கி உள்ளவர்கள் குறித்து முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனைகளிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.