Home remedies to remove dark circles that spoil the beauty of women’s faces..!!
முகத்தை வைத்துத்தான் ஒருவரின் அகத்தை எடை போடுகிறார்கள். ஆனால் சிலருக்கு கண்களுக்கு கீழ் உருவாகும் கருவளையம், அவர்களின் முக அழகையே கெடுத்து விடுகிறது.
தூக்கமின்மை, மனஅழுத்தம், ரத்த சோகை, அதிக நேரம் லேப்டாப் மற்றும் மொபைல் பயன்படுத்துவது ஆகியவை முதன்மை காரணங்களாக இருந்தாலும், மரபணு மாற்றம், வாழ்க்கை முறை போன்றவற்றாலும் கண்ணில் கருவளையம் ஏற்படுகிறது.
கருவளையம் வர முக்கியக் காரணங்கள் | Home remedies to remove dark circles
- தூக்கமின்மை: போதுமான அளவு (7 முதல் 8 மணி நேரம்) தூங்காமல் இருப்பது.
- நீர்ப்பற்றாக்குறை: உடலில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது.
- அதிகப்படியான நுகர்வு: மன அழுத்தம், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்.
- ஊட்டச்சத்து குறைபாடு: இரும்புச்சத்து (Iron) மற்றும் வைட்டமின் குறைபாடுகள்.
எளிய வீட்டு வைத்தியம் | Home remedies to remove dark circles
- வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காய் துண்டுகளைக் கண்களின் மீது வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம். இது கண்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைக்கும்.
- உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு சாற்றை பஞ்சில் நனைத்து கண்களுக்குக் கீழே தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
- டீ பேக்குகள் (Tea Bags): பயன்படுத்திய கிரீன் டீ (Green tea) அல்லது கருப்பு டீ பேக்குகளைக் குளிரூட்டிவிட்டு கண்களின் மீது வைக்கலாம்.
- வைட்டமின் ஈ / சி கிரீம்கள்: படுக்கும் முன்பு வைட்டமின் ஈ அல்லது சி நிறைந்த க்ரீம்களை கண்களைச் சுற்றி லேசாகத் தடவி வரலாம்.
- புதினா இலை பேஸ்ட்: சிறிது புதினா இலைகளை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் கண்கள் புத்துணர்ச்சியாக மாறும்.
Home remedies to remove dark circles that spoil the beauty of women’s faces..!!

இதைச் சரிசெய்யும் முறைகளை பார்ப்போம்…
மேலும் அழகு குறிப்புகள் செய்திகளுக்கு இங்கே சொடுக்கவும்:-
- சிறிதளவு தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து கருவளையத்தின் மீது தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.
- கற்றாழை ஜெல்லை கருவளையத்தின் மீது தடவி, 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவலாம்.
- உருளைக்கிழங்கு சாறை எடுத்து கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.
- வெள்ளரிக்காயை வெட்டி கண் மீது வைத்து 15-20 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.
- காபித் தூளுடன் பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்து, காலையில் கழுவலாம்.
- பாதாம் எண்ணெயை மட்டும் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.
- கிரீன் டீ போட்டவுடன் அதன் பேக்குகளை குளிர்பதனப் பெட்டியில் வைத்து, ஆறிய பின் கண்களில் வைத்து 10-15 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.
- தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.
- ரோஸ் வாட்டரை பருத்தி துணி அல்லது பஞ்சில் நனைத்து கருவளையம் இருக்கும் பகுதியில் 15 நிமிடங்களுக்கு வைத்து எடுக்க வேண்டும். தினசரி இதனை தொடர்ந்து செய்து வர, கருவளையம் நீங்கும்.