Cyclone Arnab on Tamil Nadu
What will be the impact of Cyclone Arnab on Tamil Nadu? – Here are the full details..!!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்.26) காலை புயலாக வலுப்பெற்று ‘அர்னாப்’ புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இந்த புயல் நாளை நள்ளிரவுக்குள் தீவிர புயலாகவும், நாளை மறுநாள் (அக்.27) மிக தீவிர புயலாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 28ம் தேதி காலை ஆந்திர மாநிலம் பாபட்லா முதல் விசாகப்பட்டினம் இடையே 125 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என IMD எச்சரித்துள்ளது.
(Cyclone Arnab on Tamil Nadu) தமிழகத்திற்கான எச்சரிக்கை:
அர்னாப் புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான (Cyclone Arnab on Tamil Nadu) அர்னாப் புயல், மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாகவும் அதைத் தொடர்ந்து மிகத் தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழர்களின் பண்டிகை வரலாறு பற்றி தெரியுமா? தீபாவளி வரலாறு இங்கே”
அக்டோபர் 26-ஆம் தேதி காலை 5.30 மணி நிலவரப்படி, வங்கக்கடலின் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற்றது.
அர்னாப் புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 26 நள்ளிரவுக்குள் தீவிரப் புயலாகவும், அக்டோபர் 27-ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வரையிலும், இடையிடையே மணிக்கு 140 கி.மீ. வரை பலத்த சூறைக்காற்றாக வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அர்னாப் புயல் | Cyclone Arnab on Tamil Nadu
அதன்பிறகு வடமேற்கு திசையில் நகரும் புயல், அக்டோபர் 28-ஆம் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைகளுக்கு இடையே, பபட்லா – விசாகப்பட்டினம் பகுதிகளுக்கு இடையில் கரையைக் கடக்கக்கூடும்.
அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அர்னாப் புயலால் (Cyclone Arnab on Tamil Nadu) தமிழகத்திற்கு என்ன பாதிப்பு..?

வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் மேலும் வலுப்பெறக்கூடும் என்பதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திங்கள்கிழமை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் எஞ்சிய பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழையும் மின்னலும் ஏற்படக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கூறியுள்ளது.
கனமழை எச்சரிக்கை மற்றும் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, இன்று (அக்டோபர் 26) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் புயல் மற்றும் கனமழை பற்றிய செய்திகளுக்கு இங்கே சொடுக்கவும்:-
கோவை மாவட்டத்தில் கனமழையால் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய நான்கு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தியாகதுருகம், சின்னசேலம், பொரசக்குறிச்சி, விருகாவூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) கணிப்புப்படி, (Cyclone Arnab on Tamil Nadu) அர்னாப் புயல் கரையைக் கடக்கும் விவரங்கள்:
- காலம்: அக்டோபர் 28-ஆம் தேதி முற்பகலில் (Forenoon)
- கரைக் கடக்கும் பகுதிகள்: ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைகளுக்கு இடையே, பாபட்லா – விசாகப்பட்டினம் பகுதிகளுக்கு இடையில் கரையைக் கடக்கக்கூடும்.