DMK President Stalin attacks Chief Minister Vijay as a “flawless hero” for stopping crimes..!!
முன்னால் தமிழக முதல்வரும் திமுக வின் தலைவருமான MK ஸ்டாலின் தனது x தள பக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் யை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது:-
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!
கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இதை முன்பே கணித்துத்தான், “இது என்ன நாடா இல்லை காடா?” என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?
DMK President Stalin attacks Chief Minister Vijay

‘துப்பாக்கி ஹீரோ’ எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் ‘துப்பில்லாத ஹீரோ’ எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
மேலும் அரசியல் செய்திகளுக்கு இங்கே சொடுக்கவும்
கோட் சூட் – பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?
முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அவர் அந்த பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.